சோவைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் அவசியம் தேவை - ரஜினிகாந்த்

0 446

ஊடகங்கள் நடுநிலையுடன் உண்மையை நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50 ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, சோ போன்ற பத்த்திரிக்கையாளர்கள் தற்போது அவசியம் தேவைப்படுகின்றனர் என்றார்.

முன்னதாக துக்ளக் 50ஆம் ஆண்டு மலரை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு வெளியிட, முதல் பிரதியை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். குடியரசு துணைத்தலைவருக்கு நினைவு பரிசாக வெண்கலத்திலான நடராஜர் சிலையும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ராகவேந்திரா உருவப்படமும் அளிக்கப்பட்டது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments