அழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் - குடியரசு துணை தலைவர்

0 241

அனைவரையும் உள்ளடக்கிய, அழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கம் இருப்பது நமது நீண்டகால பாரம்பரிய பெருமை என்றார்.

இந்திய நாகரிகத்தில் இயற்கை என்பது அன்போடும், மதிப்போடும் கருதத்தக்க உயிர்ப்பொருளாகவே கருதப்படுகிறது என்று அவர் கூறினார். இயற்கை பாதுகாப்புக்கான நடைமுறைகளும் ஊக்கசக்தியாக மாற வேண்டும் என்று வெங்கையா கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments