பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

0 233

சென்னையில் இருந்து இயக்கப்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பும் மக்களின் வசதிக்காக கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கடந்த 10-ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் என இன்றுவரை 14,492 பேருந்துகளில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 365 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments