குடியரசு தின அணிவகுப்பில் அப்பாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்கள்

0 226

குடியரசு தினவிழா அணிவகுப்பில், விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அப்பாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.

71வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் விழாவில், சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ பங்கேற்க இருக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி, ராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதில் ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, தாக்குதலுக்கான அப்பாச்சி ஏஎச்-64, சினூக் சிஎச்-47 ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments