புதுவடிவ புத்தகங்கள், அரங்குகள்.. வாசகர்களை கவர்ந்திட முயற்சி..!

0 117

சென்னை புத்தகக் காட்சியில், படம் பார்த்து கதை அறியும் வடிவிலான புதிய புத்தகங்கள், புது வடிவிலான அரங்குகள், புத்தகம் வாசிப்போரையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றன.

இப்படி, அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் தான் அணிவகுத்திருக்கின்றன.

வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் ஓரிடத்தில் திரளச் செய்யும் இந்த புத்தக காட்சியில், அரசியல், ஆன்மிகம், உள்ளிட்டவை குறித்த புத்தகங்கள் பலராலும், விருப்பத்துடன் வாங்கப்படுகின்றன...

 

புது முயற்சியாக காமிக்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள கல்கியின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படைப்புகள், பெரியோரிடத்தில் மலரும் நினைவுகளையும், சிறியோரிடத்தில், ஆர்வத்தையும் தூண்டுகின்றன...

 

இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பூவுலகு, இயல்வகை, காக்கை கூடு அரங்குகள், புத்தக காட்சிக்கு வருவோரை கவர்கின்றன...

 

கடந்த 9ஆம் தேதி தொடங்கிய புத்தக காட்சி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று வரையில், 4 நாட்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், புத்தக காட்சிக்கு வந்து சென்றுள்ளனர்.

பிரிண்ட் ஆன் டிமாண்ட் (Print On Demand) என்ற நுட்பத்தில், தரமாகவும் அச்சிட வேண்டிய காரணத்தால், புத்தகத்தின் விலையை, வேறு வழியின்றி, உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாக, பதிப்பாளர்கள் கூறுகின்றனர். 

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பாலமுருகன் ஐ.ஆர்.எஸ் எழுதிய கடவுளை கண்டேன், பெரியார்-அம்பேத்கர்-மார்க்ஸ் இன்றும் என்றும் தொகுப்பு, என்டிடிவி நிறுவன தலைவர் பிரணாய் ராய் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்திய தேர்தல்களை பற்றிய "தீர்ப்பு" ஆகிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதாக, பதிப்பகத்தினர் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments