2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு

0 359

2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அரசாணையில் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, மறைமலையடிகளார் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2018, 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், 3 பேருக்கு உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் ஆகியவற்றை பெறுவோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த் தாய் விருதில் 5 லட்சம் ரூபாய், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள் பெயரிலான விருதுகளில் 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம் உள்ளிட்டவையும், உலக தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளில் 1 லட்சம் ரூபாய் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments