அமெரிக்கா, ஹவாய் தீவு சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் எரிமலைக் குழம்பு

0 487

அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெள்ளம் போல் நெருப்புக் குழம்புகள் வெளியேறி வருவதால் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின. 

ஹவாயில் உள்ள கிலாயூ (Kilauea)எரிமலை கடந்த வியாழக்கிழமை அன்று சீறத் தொடங்கியது. எரிமலை சீற்றத்தில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தலான சல்ஃபர் டை ஆக்ஸைடு வாயு அதிகளவில் வெளியேறி வருவதால் நிலைமை மோசமாகி உள்ளது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது. வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகள், வீதிகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து, வழியெங்கும் உள்ள கட்டுமானங்களையும், காடுகளையும் சாம்பலாக்கியபடி முன்னேறி வருகிறது.

எரிமலைக் குழம்பு சூழ்ந்து கார் ஒன்றை தீக்கிரையாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இரும்பு கேட்டையும் உருக்கிய படி நகரும் நெருப்புக் குளம்புகளால் லெய்லானி எஸ்டேட்ஸ் (Leilani Estates) பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்தன. மரம், செடி, கொடிகளும் பற்றி எரிவதால், ஹவாய் தீவு புகை மண்டலமாக மாறிப் போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT