குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் பணிகளை தொடங்கியது உத்தரப்பிரதேசம்

0 236

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் பணிகளை உத்தரப்பிரதேசம் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து, உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும், முஸ்லிம் அல்லாத அகதிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.

19 மாவட்டங்களில் வசிக்கும் இந்த அகதிகள் குறித்த விவரங்களும், அவர்கள் எந்த சூழலில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரநேர்ந்தது என்பது உள்ளிட்ட  வாக்குமூலங்களும் அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச அரசு திரட்டியுள்ள விவரங்களின்படி அங்கு 19 மாவட்டங்களில் முஸ்ஸிம் அல்லாத அகதிகள் மொத்தம் 40 ஆயிரம் பேர் வசிப்பதாகவும், இதில் பிலிபித் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் வரை வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments