பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து 3.81 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

0 262

பொங்கல் விடுமுறைக்காக கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து 14 ம்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 10ம் தேதியிலிருந்து இதுவரை 7 ஆயிரத்து 8 ஆயிரத்து 9 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 795 பேர் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தால் பயணிகள் சிரமமின்றி செல்ல முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments