தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

0 1250

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் மும்மதத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும், அவர்களுடைய பெற்றோரும் இணைந்து சமத்துவ பொங்கலை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவ- மாணவிகளின் தப்பாட்டம், பறையிசை, நடனம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

image

 

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மலில் தனியார் பள்ளியில் தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மழலை குழந்தைகள் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

image

 

திருப்பூர் - ஆண்டிபாளையம் தெற்குப்பகுதியிலுள்ள முல்லைநகர், தனலட்சுமி நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடுவம்பாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

image

 

சென்னையை அடுத்த விநாயகபுரத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் தாவணி அணிந்த பெண்கள் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் பெண்களுக்கு சமையல், போட்டி,கோலப்போட்டி, தப்பாட்டம் கரகாட்டம் பொய்க்கால் குதிரைச, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கிராமிய கலைகள் நடைபெற்றன.

image

திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி மாணவ -மாணவிகள் தமிழ் பண்பாட்டுக் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் வண்ணமயமான ஆடைகளில் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர்.  

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி 

திருச்சி அடுத்த சமயபுரம் அருகிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழும வளாகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து கல்லூரி முதல்வர்களும், மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முன்பு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்ட கலைஞர்களும் ஊர்வலமாக வந்தனர். மாணவர்கள் பார்வையிடுவதற்காக ஜல்லிக்கட்டு காளைகளும் வரவழைக்கப்பட்டிருந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலுள்ள ஆர்.சி.எம் உயர்நிலை பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவலூர்பேட்டை பகுதியிலுள்ள எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவர்கள், விவசாய பெருமக்களுக்கு பாதபூஜை செய்து தை திருநாளை வரவேற்றனர்.

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மருத்துவமனை இயக்குநர் விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் பங்கேற்றனர். ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புற நடனக்குவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் 101 பானைகளில் மாணவிகள் பொங்கல் வைத்தனர். மேலும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாகவும் பொங்கல் வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நவாமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீசாய் பாரத் கல்லூரியில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்த மாணவ, மாணவியர், உரியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், மண்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியது. பொங்கல் வைத்து வழிபட்ட மாணவிகள், உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் இயங்கி வரும் சவுடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவ, மாணவியர் குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments