அட இது எங்களுக்கு தெரியாம போச்சே.! இஷாந்த் சர்மாவை கலாய்த்த கோலி

0 505

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டிற்கு, காமெடியாக பதில் அளித்து கலாய்த்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் நிச்சய வீரர்கள் பட்டியலில் இஷாந்த் ஷர்மாவும் ஒருவர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வாழ்கை ஒருமுறை தான் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் " you only live once" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இதனை பார்த்த கேப்டன் விராட் கோலி, அவரது போஸ்டிற்கு "இது எங்களுக்குத் தெரியாது" என்று இஷாந்தை கிண்டல் அடித்து இந்தியில் கமெண்ட் பதிவு செய்தார். விராட் கோலியின் இந்த கிண்டல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments