அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் திட்டம்

0 421

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இந்தியா வரும் நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் சிறு, குறு தொழில் மேம்பாடு குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜெப் பெசோஸ், பிரதமர் மோடி மற்றும் அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அமேசான் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெப் பெசோஸ் வருகையின் போது, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.

அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, டெல்லி உட்பட 300க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்தப் போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments