பல்கலைக் கழக மாணவி தற்கொலை..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் நிவேதிதா. இவர் பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், விடுதி அறையில் நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பல்கலைக் கழக நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல், துணைவேந்தர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments