சென்னையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

0 351

சென்னையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேட்டில் 8-ந்தேதி முதல் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ, இன்று 2,100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

கிலோ 500 ரூபாய் வரை விற்று வந்த ஜாதிமல்லி இன்று 700 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற முல்லை 900 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற சாமந்தி 100 ரூபாய்க்கும்,80 ரூபாய்க்கு விற்ற பன்னீர் ரோஸ் 150 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் 400ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments