பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

0 174

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் மின்விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின்சாரம் தாக்கியும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments