கோத்தகிரி அருகே காவல் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

0 1412

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள மலைக்கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இருதொழிலாளர்களின் உடலை மீட்ட போலீசார் அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மெட்டுக்கள் எனும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், பிம்மன் ஆகிய இரு தொழிலாளர்கள் நேற்றிரவு அப்பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான மேரக்காய் தோட்டத்தில் காவல் பணிக்காக சென்றுள்ளனர்.

காலையில் அந்த தோட்டத்தின் உரிமையாளர், தோட்டத்தில் சென்று பார்த்தபோது, அங்கு அவர்கள் இருவரது உடலிலும் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். தகவலை தொடர்ந்து சம்பவ தொடர்பாக சோலூர் மட்டம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments