கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களுக்கே 74சதவீத ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல்

0 390

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களுக்கே 74 சதவீத ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், அமெரிக்காவில் தங்கி பணிபுரிய ஆண்டுதோறும் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு 74 புள்ளி 2 சதவீத ஹெச்1பி விசாக்களையும், கடந்த ஆண்டு 75 புள்ளி 6 சதவீத ஹெச்1பி விசாக்களையும் இந்தியர்களுக்கே வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு 2016ஆம் ஆண்டு 9 புள்ளி 3 சதவீதமும், கடந்த ஆண்டு 9 புள்ளி 4 சதவீத ஹெச்1பி விசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா கூறியுள்ளது. ஹெச்1பி விசா முடிந்ததவர்களுக்கு வழங்கப்படும் விசா நீட்டிப்பும்,  இந்தியர்களுக்கே அதிகளவில் வழங்கப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments