அமெரிக்கா தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராகிறார் ஆலிவர் நார்த்

0 217

அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கத்தின் அடுத்த தலைவராக ஆலிவர் நார்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது தேசிய பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்று இருந்தவர் ஆலிவர் நார்த். கடற்படையில் லெப்டினண்ட் கர்னலாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இவரை தேசிய துப்பாக்கி சங்கத்தின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுப்பதாக சங்கத்தின் செயல் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் இவர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை இவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments