பாம்பனில் விறுவிறுப்புடன் நடக்கும் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி

0 590

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலுக்கு நடுவே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில்வே பாலம் பழமையானதால் அதன் அருகே புதிய இரு வழி பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. ஆனால் வேகமான காற்று, கடல் கொந்தளிப்பு, தொடர் மழை உள்ளிட்ட காரணங்கள் கட்டுமான பணி தடைப்பட்டிருந்தது.

தற்போது இயல்பு நிலை திரும்பியதை அடுத்து  பாம்பன் வடக்கு பகுதியில் புதிய ரயில் பாலத்திற்காக தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 330 தூண்களை  அமைப்பதற்காக, கடலில் மண்ணை தோண்டும் பணியில் 5 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments