சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க தடை நீட்டிப்பு

0 368

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க விதிக்கப்பட்ட தடையை வரும் 13 ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செக்காலை கோட்டையை சேர்ந்த தேவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை பெற்றதாகவும் சில மணி நேரத்தில் பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்து சான்றிதழ் வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவராக  பிரியதர்ஷினி பொறுப்பேற்க தடை விதிக்கவும் தேவி கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய பின் அதனை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கே உள்ளநிலையில் அந்த அதிகாரத்தை தேர்தல் அலுவலர் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் பிரியதர்சினி தரப்பு வாதத்தை கேட்பதற்காக ஜனவரி 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments