13 மாவட்ட வாக்கு எண்ணிக்கை சிசிடிவி வீடியோ தாக்கல் செய்ய அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

0 268

13 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஜனவரி 3ம் தேதி மாலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் 7000 க்கும் அதிகமாக சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளதால் பதிவிறக்கம் செய்ய தாமதம் ஆவதாக கூறியும் 15 நாள் அவகாசம் கோரியும் மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய ஆகும் தாமதத்திற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments