மாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் வந்தால் திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும்

0 346

மாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் வந்தால், திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், எதிர்கட்சியினருக்கு பதிலளித்த முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக எதிர்கட்சியினர் தெரிவித்து வந்ததாக கூறினார்.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது என்றும், குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது என்றார். மீதமுள்ள 9 மாவட்டம், நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், எஞ்சியுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments