ஆந்திராவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு சொகுசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநில அரசின் அமராவதி சொகுசு பேருந்து விஜயவாடாவில் இருந்து குப்பத்துக்கு இன்று அதிகாலையில் சென்றபோது, நேரெதிரே தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா செல்ல திருப்பதி நோக்கி வந்த எஸ்எல்என்எஸ் நிறுவன பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பேருந்து டிரைவர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். தகவலின்பேரில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தோரை மீட்டு, ஆம்புலன்ஸ் வராததால் லாரியில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments