இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வு..!!

0 343

நேற்றைய சரிவை சரிகட்டும் விதமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியுள்ளன.

வர்த்தக நேரம் துவங்கியவுடனேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 12 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில், ஒரே நாளில் பங்கு முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

வளைகுடா நாடுகளின் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன. இந்நிலையில் அந்த சரிவிலிருந்து மீளும் விதமாக இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 210 புள்ளிகளாக வர்த்தகமானது. எஸ்.பி.ஐ வங்கியின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்தன. ஹெச்.டி.எப்.சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் லாபம் ஈட்டின.

நிஃப்டி ஒரு கட்டத்தில் 152 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரத்து 145 புள்ளிகளாக வர்த்தகமானது. நிஃப்டியின் துறை சார்ந்த அனைத்து குறியீடுகளும் உயர்வுடனேயே வர்த்தகமாகின.

பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 2.3 சதவீதமும், மற்ற துறைகளின் குறியீடுகள் தலா 1 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாகின. உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை நிலையாக இருப்பதை அடுத்து பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், 22 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 71 காசுகளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments