இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

0 226

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று கடும் வீழ்ச்ச்சியை எதிர்கொண்டன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 676 புள்ளிகளாக குறைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 234 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 11 ஆயிரத்து 993 புள்ளிகளாக குறைந்தது. உலோகம், நிதி, ரியல்எஸ்டேட், வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக அளவில் சரிந்தது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்ற அச்சம் காரணமாக எண்ணெய் நிறுவன பங்குகள் விலையும் சரிவடைந்தது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments