ஆந்திர தலைநகரை மூன்றாகப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0 282

ஆந்திராவின் தலைநகர் அமராவதியை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்தினர். விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி என மூன்று இடங்களில் தலைநகரை அமைக்க ஜெகன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் கடந்த 3 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நிர்வாகத் தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரமாண்டப் பேரணி நடைபெற்றது. அமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த நடைபயணத்தில் பங்கேற்றனர். அமராவதியைப் பாதுகாப்போம், ஆந்திராவைப் பாதுகாப்போம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments