சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து

0 239

ஆந்திரா மாநிலம் நீலிவாடசா அருகே, சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 45 சுற்றுலா பயணிகள், ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆந்திரா மாநிலம் நீலிவாடசா சந்திப்பு அருகே பேருந்து சென்ற போது, வளைவு ஒன்றில் திரும்பியுள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, விதிமுறைகளை மீறி சாலையோரமாக அலுமினிய லோடுடன் நின்றிருந்த லாரி மீது மோதியது.

அதிர்ஷடவசமாக பேருந்தில் பயணித்த 45 பயணிகளும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், மோதிய சிறிய நேரத்திலே பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments