உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியீடு

0 570

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான 515 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 513 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், 513 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களை பாமக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளன. திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் முடிவு அறிவிக்கப்படவில்லை.

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஐயாயிரத்து 90 இடங்களில் 3 இடங்கள் தவிர்த்து மற்ற அனைத்திற்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம், குருந்தன்கோடு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா இடத்தின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இதில் 2100 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களை தி.மு.க.வும், 1781 இடங்களை அ.தி.மு.க.வும் கைப்பற்றியுள்ளன.

கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களில் ஒன்பதாயிரத்து 624 இடங்களில், 10 இடங்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைப் பொறுத்தவரை 76 ஆயிரத்து 470 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments