தி ராங் பாய் நெக்ஸ்ட் டோர்..! மிளகாய் பொடி கொலை

0 729

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, தாயின் காதலனை மிளகாய்ப் பொடியைத் தூவி வெட்டிக் கொன்ற மகனையும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஹாலிவுட் பாணியிலான ரகசிய காதலால் உயிரிழந்தவரின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சகாயம் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கட்டுமானப் பணி செய்து வந்த நிலையில், கடந்த 25 ந்தேதி மர்ம கும்பலால் மிளகாய்ப் பொடி தூவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்த விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அலெக்சாண்டர் அதிக முறை செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது. அந்த பெண் வீட்டில் இருந்து மாயமாகி இருந்தார். அடுத்ததாக அலெக்சாண்டர் அந்த பெண்ணின் மகள்களிடமும் பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணின் இரு மகள்களும் மாயமாகி இருந்த நிலையில், அந்த பெண்ணின் மகன் ஜவகரை பிடித்து விசாரித்த போது கொலைக்கான மர்மம் விலகியது.

அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய அலெக்சாண்டர், அந்த பெண்ணுக்கு உதவுவது போல பேசி நம்பவைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளர். அந்த பெண்ணுடன் அவ்வப்போது இச்சையை தீர்த்துக் கொண்ட அலெக்சாண்டர், அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரது மகள்களிடமும் அத்துமீறலை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உதவியாக இருப்பதுபோல நடித்து வீட்டிற்குள் நுழைந்தவன் குடும்பத்திற்கே வில்லனாக இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் மகன் ஜவகருக்கு, தனது தாயும் சகோதரிகளும் அலெக்சாண்டரிடம் சிக்கியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹாலிவுட் படம் ஒன்றில் வருவது போல அலெக்சாண்டரை தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்துள்ளான். 25 ந்தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற அலெக்சாண்டரின் வாகனத்தின் மீது மற்றொரு வாகனத்தை கொண்டு மோதி கீழே விழச்செய்துள்ளனர். அப்போது அலெக்சாண்டர் மீது மிளகாய்ப் பொடியை வீசி நிலைகுலையச் செய்துள்ளனர். 4 பேர் கொண்ட கும்பல் அலெக்சாண்டரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அருகில் உள்ள கால்வாயில் குளித்து விட்டு தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்னதாக தனது தாய் மற்றும் சகோதரியை வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு இந்த சம்பவத்தை ஜவகர் மற்றும் கூட்டாளிகள் செய்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவறான உடல் சார்ந்த தேடல் எப்போதும் வாழ்க்கையை மட்டுமல்ல உயிரையும் அழித்து விடும் என்பதற்கு இந்த கொடூர சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments