10 ரூபாய்க்கு சாப்பாடு..! மகாராஷ்டிராவின் அம்மா உணவகம்

0 706

தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று மலிவு விலையில் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மகாராஷ்ட்ரா மாநில அரசும் தொடங்குகிறது.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய  அந்த மாநில அரசின் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக், மக்களுக்கு பத்து ரூபாய் விலையில் மலிவு விலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றார்.

இந்த திட்டத்தின் 2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், 100 கிராம் காய்கறி கூட்டு, 100 கிராம் பருப்பு குழம்பு ஆகியவை பத்து ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

சிவ்போஜன் என்ற பெயரிலான இந்த திட்டம் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி முதல்  தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக 15 இடங்களிலும், பின்னர் மாநிலம் முழுவதிலும் சிவ்போஜன் உணவகம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments