தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜனவரி 6-ல் தொடங்குகிறது?

0 244

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையின் ஒரு கூட்டத்தொடர் முடிந்து, 6 மாதத்திற்குள் அடுத்த கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்பது விதியாகும். கடைசியாக, ஜூன் 28-ந் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி வரை  நடைபெற்றது. எனவே ஜனவரி 20ஆம் தேதிக்குள் அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  நடத்தவேண்டும்.

ஜனவரி 13ஆம் தேதிக்கு பின் பொங்கல் விடுமுறை வரவுள்ளதால், முதல் வாரத்திலே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments