பங்குகளை விரைந்து விற்கா விட்டால் ஏர் இந்தியாவை மூடும் நிலை ஏற்படும் - ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை

0 159

ஏர் இந்தியா பங்குகளை விரைந்து விற்கத் தவறினால், நிறுவனத்தையே மூட நேரிடும் என காப்பா (CAPA) எனப்படும் ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்தில்  கூடுதலாக 200 கோடி வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும்  அந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஏர் இந்திய விமான நிறுவன  பங்குகளை வாங்குவோர், பல ஆண்டுகளாகச் சந்தித்து வரும் இழப்புகளை ஈடுகட்டுவோராகவும் இருக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments