குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0 441

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசியதால், அப்பகுதி போர்க்களம் போல மாறியது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். பேருந்துகள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் பலப்பிரயோகம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அங்கும் வன்முறை வெடித்ததால் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி என போலீசார் பலப்பிரயோகம் செய்தனர்.

இந்நிலையில், இவ்விரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்வா கல்லூரி விடுதி மாணவர்கள் நேற்றிரவு பேரணி செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கல்லூரி வளாகத்திற்குள் திருப்பி அனுப்பினர். கல்லூரி வளாகத்திற்குள் இருந்தபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களை நோக்கி மாணவர்கள் கற்களை வீசித் தாக்கியதில், அப்பகுதியே போர்க்களம் போல மாறியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments