தொழில்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

0 194

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள உள்ளார்.

இன்றைய முதல் நாள் கூட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், நிதிச்சேவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகளை மேம்படுத்துவது, ஏற்றுமதித் துறையில் உள்ள போட்டிகளை சமாளிப்பது, தனியார்துறை முதலீடுகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்துறை பிரதிநிதிகள், விவசாயத் துறைகளைச் சேர்ந்தவர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துவிட்டதால் பொருளாதாரத்துக்கு உத்வேகம் கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் இது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments