மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் - கமல்ஹாசன்

0 1063

மக்களுக்கு இடையூறு செய்யாத வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் அழுத்ததமான கொள்கைகளில் ஒன்று என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை வேலப்பன்சாவடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 35வது வணிகர் தினமும், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், தாமும் ஒரு சிறு வணிகர்தான் என்றார். கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கடமை ஆற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். மக்களை பாதித்து அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம், கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம் என்ற வணிகர்களின் நிலைப்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அழுத்தமான கொள்கைகளில் அதுவும் ஒன்று என சுட்டிக்காட்டினார். 

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., என திரைப்படத்துக்கு பெயர் வைத்தபோது, ஒரு சங்கமே தம்மிடம் கோபத்தைக் காட்டியதாகவும் நினைவு கூர்ந்தார்.

தமிழக அரசியல் இழந்த மாண்பை மீட்கவே தாம் வந்துள்ளதாகக் கூறிய கமல், பல வியாபாரங்களை துலங்க வைத்த கைககளுடன் கைகுலுக்குவதில் தாம் பலம் பெறுவதாகக் குறிப்பிட்டார். தேய்ந்து கொண்டிருக்கிறோம் என வருத்தப்படும் சிறு வணிகர்கள் தான் நாளைய நாயகர்கள் என்பதை அவர்களுடன் பேசும்போது தாம் உணர்ந்துகொண்டதாகவும் கமல் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments