பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

0 179

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டிலேயே அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து மத்திய அரசு சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது. அப்போது முக்கிய தலைவர்கள் பலர் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டனர்.

கோரக்பூர் சாலையில் உள்ள பரூக் அப்துல்லாவின் இல்லமும் சப் ஜெயிலாக அறிவிக்கப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டார். 82 வயதான பரூக் அப்துல்லா மீது பொது பிரிவிலும், தேசிய பாதுகாப்பு அவசர சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஓமர்அப்துல்லா மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments