சபரிமலையில் 28 நாட்களில் ரூ.104 கோடியைத் தாண்டியது வருவாய்

0 195

சபரிமலையில் நடை திறக்கப்பட்டு 28 நாட்களில் கோயிலின் வருமானம் 104 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் வாசு, மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு 28 நாட்களான நிலையில் தற்போது வரை கோயிலின் வருமானம் 104 கோடியே 72 லட்சம்  ரூபாய் என்று தெரிவித்தார்.

ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கோயிலின் வருவாய் 64 கோடியே 16 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது உண்டியல் மூலம் வந்துள்ள சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாணயங்களை எண்ணுவதற்கு, அவற்றை நீதிமன்ற அனுமதியுடன் எடை போட்டுப் பார்க்க இருப்பதாகவும் வாசு தெரிவித்துள்ளார். 

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments