மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறது யானைகளுக்கான புத்துணர்வு முகாம்...

0 193

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று காலை தொடங்குகிறது.

தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள இம்முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து திருக்கோவில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 27 யானைகள் பங்கேற்கின்றன.

முகாமில் பங்கேற்க உள்ள யானைகளை கட்டும் இடம், உணவு தயாரிக்கும் இடம்,பாகன்கள் தங்கும் இடம், யானைகள் குளிக்க சவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம்,கலவை சாதம்,ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ பரிசோதனை,நடைபயிற்சி என யானைகளின் உடல் நலனை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments