என்னை மறந்து விட்டாயா....?உன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...!

0 368

குரங்குகளிலிருந்து மனிதன் வந்தான் என்பது மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட விஷயம் .மனிதர்களுக்கும்,குரங்குகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

அவற்றின் சில பரிணாமங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான். முகம் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களை தவிர வேறு எதுவும் வேறுபாடில்லை. உலகில்260 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான குரங்குகள் உள்ளன, மேலும் அவை புதிய உலகம் மற்றும் பழைய உலகம் உட்பட இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிய உலக குரங்குகள் அமெரிக்காவில் வாழ்கின்றன, அதே நேரத்தில் பழைய உலக குரங்குகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. அச்சுறுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான உயிரினங்களின் 2007 சிவப்பு பட்டியலில் இருபத்தொரு ப்ரைமேட் இனங்கள் அழிவின் நிலையில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஓர் ஆய்வின் படி ஒரு நாளைக்கு 6000 குரங்குகள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது.

image

இதற்கு கால நிலை மாற்றம்,மாறுபட்ட உணவு பழக்கம்,வாழிடங்கள் ஆக்கிரமிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக அமைகிறது. இது மட்டும் இல்லாமல் மனிதனின் ஆராய்ச்சிக்கு அதிகம் பலியாவது குரங்குகள் தான். இதுவரை 55 லட்சத்திற்கு மேற்பட்ட குரங்குகளை மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டு இது போன்ற ஆராய்ச்சிக்கு தடைவிதித்தாலும் இன்னும் சில நாடுகளில் துன்புறுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

இவற்றை எல்லாம் தடை செய்யும் நோக்கில்  அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஸ்டேட் பல்கலைகழகத்தை சார்ந்த கேசி சூர் மற்றும் எரிக் மில்லிகின் ஆகிய இரு மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட குரங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தினத்தில் குரங்குகளின் பாதுகாப்பு மற்றும் அரியவகை இனங்கள் பற்றி மக்களுக்கு விலங்கு நல ஆர்வலர்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மனிதனுக்கு குரங்கு புத்தி உண்டு என்று அடிக்கடி சொல்லுவார்கள் .அதற்கு காரணம் உண்டு, சில நேரங்களில் மனிதன் குரங்கை போல் நடந்து கொள்வான். மனிதர்களை போன்றே பாசம் ,அழுகை,துக்கம் என்பது விலங்குகளுக்கும் உரித்தானது.

image

மனிதர்களை போலவே குரங்குகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு .இதற்கான ஆராய்ச்சிகளை பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். வட இந்தியாவில் கடவுளாக பார்க்கப்படும் இவ்வினத்தை தென்னிந்தியாவில் அச்சுறுத்தும் விலங்காகவே பார்க்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் வாழும் தேவாங்கு,வெள்ளை மந்தி ,நாட்டுக்குரங்கு, கருமந்தி ஆகியவை கூட்டம் கூட்டமாக வாழ்வதை கண்கூடாக பார்க்கமுடியும். வால்பாறையில் வாழும்  சிங்கவால் குரங்கு என்ற இனம் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் உள்ளது.

image

 காடுகளில் உள்ள இலை தழை,தேன்,பழங்கள்,சிறு பூச்சிகளை சாப்பிட்டு பழகிய அதற்கு கருணை உள்ளம் படைத்த மனிர்தர்கள் சிப்ஸ்,கார வகைகள்,குளிர்பானங்கள்,இனிப்பு போன்றவற்றை கொடுத்து அதன் உணவு சங்கிலியை மாற்றிவிட்டோம். இதனால் ஜீரண கோளாறு போன்ற தொற்று வியாதிகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் அதுவும் பறிக்க ஆரம்பித்துவிட்டது நாள் ஒன்றுக்கு சராசரியக நம் நாட்டில் 1000 பேர் குரங்கு தாக்குதலால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த சம்பவத்திற்கு யார் காரணம்? மனிதனா? இல்லை அதன் குணமா?

image

யார் மேல் குற்றம்? காரில் இருந்து எறியப்படும் ஒரு சிப்ஸ் துண்டுக்காக சாலையை கடக்கும் போது எதிரில் வரும் வாகனத்தில் சிக்கி உயிர் இழக்கிறது.

நம் வீட்டில் இருப்பவர்கள் சிலநேரத்தில் தொந்தரவு செய்வார்கள்,விளையாடுவார்கள் அதற்காக விஷம் வைக்க மனசு வருமா ஆனால் தோட்ட பயிர்களை சேதப்படுத்தியதற்காக வாயில்லா ஜீவன்களுக்கு விஷம் வைக்கிறோம்.அதனால் எத்தனை உயிரினங்கள் இறக்கிறது.இது போன்ற சம்பவம் தான் கோத்தகிரியிலும் அரங்கேறியது. மனிதனின் அலட்சியத்தால் 9 குரங்குகள் இறந்துள்ளது.தாயில்லாமல் குட்டிகள் என்ன பாடுபடும் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

மூதாதையர் வழி வந்தவர்கள் நாம் ,அவர்களை காக்க மறந்து விட்டோம் இது இன்றைய எதார்த்தம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments