நேபாளத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

0 228

நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில்  காவலர் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா, வீட்டிற்கு முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதையடுத்து, அங்கு வந்த காவல் ஆய்வாளர் அமிர் குமார் மற்றும் காவலர் ஒருவர் கீழே கிடந்த பொருளை சோதனையிட்டனர்.

அப்பொழுந்து எதிர்பாரதவிதமாக அந்த பொருள் வெடித்து சிதறியதில்,ராஜேஷ் ஷா,அவரது மகன் ஆனந்த ஷா, காவல் ஆய்வாளர் அமிர் குமார் தாஹல் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மற்றுமொரு காவலர் உட்பட 3பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments