PV சிந்து ஆறுதல் வெற்றி

0 275

உலக டூர் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.

பேட்மிண்டன் போட்டிகளின் சர்வதேச தர வரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்று வருகிறது.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பிவி சிந்து இடம் பிடித்திருந்தார். அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் கடைசி போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-19, 21-19 என வெற்றி பெற்றார்.வெற்றி பெற்றாலும் கூட ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்ததால் சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments