பெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்

0 374

மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் ஒருவர் காலணியால் தாக்கியதாகக் கூறி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாலதி என்ற பயிற்சி மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை மருத்துவர் மாலதி கண்டிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி, மருத்துவர் மாலதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மருத்துவர் மாலதி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பணியிலிருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தாக்குதல் நடத்திய பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments