தனக்கு உதவிய சென்னை ஓட்டல் ஊழியரை கண்டுபிடித்து தருமாறு சச்சின் கோரிக்கை

0 964

சென்னையில் தமக்கு உதவிய ஓட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுமாறு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இந்திய அணி தங்கி இருந்தது. அப்போது, சச்சினை சந்தித்த அந்த ஓட்டல் ஊழியர் ஒருவர், விளையாடும் போது, கைக்கான தடுப்பு உறையை அணிந்து கொள்ளுமாறு ச ச்சினுக்கு யோசனை தெரிவித்தார்.

image

இதனை பின்பற்றியதால் போட்டியில் சிறப்பாக விளையாடியதாக ச ச்சின் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்போது மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி மோதும் போட்டியின் வர்ணனைக்காக சென்னை வந்துள்ள சச்சின், அந்த ஊழியரை சந்தித்து நன்றி கூற விரும்புவதாகவும், அவரை கண்டறிய உதவுவமாறும் தமது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments