சூடான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை

0 174

சூடான் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷிருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் சூடானில் அதிபராக இருந்த அவரது எதேச்சிகார ஆட்சிக்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.அதை அடுத்து ராணுவத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டது சர்வதேச நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.

பதவி பறிக்கப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் முதல் காவலில் வைக்கப்பட்ட ஒமர் அல் பஷிரின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு நடத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments