சிறப்பாக செயல்பட்ட பஞ்சாயத்துக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழக பஞ்சாயத்து

0 326

மிஷன் அந்தியோதயா திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள், சாலை பராமரிப்பு, கல்வி, மின்சார வசதி, கிராமக் குடியிருப்பு மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தரவரிசையில், திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் (Bhavnagar) உள்ள பம்பானியா (Bambhaniya) கிராம பஞ்சாயத்து இரண்டாம் இடமும், மேலும் 4 குஜராத் பஞ்சாயத்துகள் 3ம் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 5 பஞ்சாயத்துகள் மற்றும் தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களில் தலா 2 பஞ்சாயத்துகள் 4-வது இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு முதல் 50 இடங்களில் 49 இடங்களைப் பிடித்த ஆந்திர மாநிலம் இம்முறை முதல் வரிசையை தவற விட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments