டெல்லியில் நிலவும் பனி மூட்டத்தால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 111

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவருவதால், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குளிர் காலம் தொடங்கி உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் டெல்லியில் , வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

மேலும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தை போன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது. இதனிடையே இமாச்சலபிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.

தொடர்ந்து பெய்யும் பனியால் பல ஊர்களில் சாலைகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல வெண்பனி படர்ந்து கிடக்கிறது. சாலைகளை மூடிய பனியால் பல ஊர்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments