பொய் பிரசாரங்களை மக்கள் தவிர்க்க வேண்டுமென ராணுவம் கோரிக்கை

0 188

குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பை முன்னிறுத்தி, சமூக ஊடகங்களில் போலி செய்திகள் வெளியிடுபவர்களுக்கு எதிராக ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற அசாமில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அங்கு முகாமிட்டு உள்ள ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக சிலர் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பொய் பிரசாரங்களை மக்கள் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளது.

சில தீங்கு விளைவிக்கும் செய்திகள், தவறான பிரசாரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது பொய்யான வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதில் கவனம் செலுத்தவும் வேண்டாம் என்றும் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments