சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

0 293

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram rathour)) 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்குவதால், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி முழு கவனத்துடன் விளையாடி வருவதாக தெரிவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறந்த வீரர் என்றும், தனி நபராக அணிக்கு வெற்றி பெற்றுத்தரும் திறமையுடையவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொலார்ட், இந்திய அணியை எதிர்கொள்ள வியூகம் வகுத்திருப்பதாக குறிப்பிட்டார்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments