வெள்ளைத் தீவு எரிமலை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வு

0 173

நியூசிலாந்து நாட்டில் வெள்ளைத்தீவில் எரிமலை சீற்றம் நிகழ்ந்த இடத்தில் இருந்து மேலும் 6 உடல்களை ராணுவத்தினர் மீட்டனர்.

அந்த நாட்டின் வகாடனே நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் கடந்த 6-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் 47 பேர் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எரிமலை வெடித்து சிதறியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டனர். இதன் மூலம் வெள்ளைத்தீவில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments