பிரதமர் மோடி கங்கை ஆற்றில் படகு சவாரி

0 201

கங்கை நதியை தூய்மைபடுத்துவது தொடர்பான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்து இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளை பார்வையிட்டார்.

முன்னதாக கான்பூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

அதில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட மோடி, பின்னர் அடல் காட் பகுதியிலிருந்து கங்கை நதியில் படகு சவாரி மேற்கொண்டார்.

அதில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் தற்போது வரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments